வவுனியாவின் பல பிரதேசங்களில் பெய்த கடும் காற்றுடன் கூடிய அடைமழை காரணமாக பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட தம்பனை, கல்லுமலை, மருக்காரம்பளை, கண்ணாட்டி, கணேசபுரம் ஆகிய கிராமங்களிலேயே இவ்வாறு காற்றுடன் கூடிய அடைமழை பெய்துவருவருவதால் அங்கிருந்து 57 குடும்பங்களைச் சேர்ந்த 173 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.அவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டதாக வவுனியா இடர் முகாமைத்துவ நிலைய பொறுப்பதிகாரி எஸ். சூரியராஜா தெரிவித்தார்.
இந்த இயற்கை அனர்த்தம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்-
வவுனியாவில் பல்வேறு இடங்களிலும் நேற்று மாலை முதல் கடும் காற்றுடன் பெய்த மழையால் குடியிருப்புகளின் கூரைகள் சேதமடைந்து வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.
தற்போது காலநிலை சீரடைந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
இதேவேளை, சில வீடுகள் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டமையினால் அந்த குடும்பங்கள் தொடர்ந்தும் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளதுடன் சேதவிபரங்கள் குறித்து வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தகவல்களை பதிவு செய்து வருகின்றது என்றார்.
No comments:
Post a Comment
Leave A Reply