blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, May 1, 2014

தமிழருக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடும் கூட்டமைப்பு

தமிழ் மக்களின் துன்ப,துயரங்களுக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து மக்களுக்காகக் குரல் கொடுக்கும்.
 இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்   எம்.இராஜேஸ்வரன் தெரிவித்தார். திருக்கோவில், காயத்ரி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
இன்று சிலர் தமிழ் மக்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றையும் செய்யவில்லை என்று மேடைகளில் பேசுகின்றனர்.

கூட்டமைப்பு உறுப்பினர்கள் எமது மக்களின் பாதுகாவலர்களாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

யாரும் எங்களைப்பற்றி தமிழ் மக்களுக்கு சொல்லவேண்டிய அவசியமில்லை. நம்பிக்கையுடன் எமக்கு வாக்களித்த மக்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகள் நன்கு தெரியும். எனவே கொள்கைகள் எதுவும் இல்லாமல் அரசியல் நடத்தும் சிலர் கூட்டமைப்புக் குறித்து தவறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

கூட்டமைப்பு மக்களின் அபிவிருத்திக்கு ஒருபோதும் தடையாகச் செயற்பட்டதில்லை. ஆனால் அரசு நேர்மையாக எமது மக்களுக்கு வேண்டியதைச் சரியாக செய்ய வேண்டும் என்று தான் கூறுகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►