பயங்கரவாத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டமானது தற்போது சாதாரண மக்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்படுவதால், அதில் உடனடியாகத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப் படவேண்டும் என்றும், அதற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரி வடமாகாண சபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் தலை மைத்துவச் சபை உறுப்பினரான லக்ஷ்மன் கிரியயல்ல மேற்கண்டவாறு கூறினார்.
போர்க் காலத்தில் சில சட்டங்கள் இறுக்கமாகக் கடைப்பிடிக் கப்பட்டன. தற்போது யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, போர்க் காலத்தில் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்ட சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சட்டத்திருத்த பிரேரணையொன்றைக் கொண்டுவருவதன் மூலம் இதை இலகுவாகச் செய்ய முடியும். இதனைக் கையாள்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பை தெரிவுக் குழுவுக்கு அழைப்பதற்கு முன்னர், ஆளுந்தரப்பில் இடம்பெற்றுள்ள அதிகாரப் பகிர்வை ஆதரிக்கும் உறுப்பினர்களை அரசு தெரிவுக்குழுவுக்குள் உள்வாங்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment
Leave A Reply