blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, May 1, 2014

20% பஸ் கட்டண அதிகரிப்புக்கு கோரிக்கை

பஸ் தொழிற்துறையை நடத்துவதற்கு போதியளவிலான வருமானம் கிடைக்கப்பெறாமையால் எதிர்வரும் ஜூலை மாதம் இடம்பெறவுள்ள பஸ் கட்டண திருத்தத்தில் கட்டாயமாக 20 சதவீத கட்டண அதிகரிப்பு இடம்பெற வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களின் சம்மேளன செயலாளர் அங்ஜன பிரியங்ஜித் தெரிவித்தார்.

இந்த கட்டண அதிகரிப்புக்கமைய ஆகக் குறைந்த கட்டணமான ஒன்பரு ரூபா, 10 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பஸ் கட்டண திருத்தத்தில் அவதானிக்கப்படும் 12 காரணிகளில் ஒன்றான டீசல் விலை அதிகரிப்பானது கடந்த கடந்த சில காலங்களில் இடம்பெறாத போதிலும் ஏனைய 11 காரணிகளும் நூற்குக்கு 200 முதல் 300 வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, நடைமுறையில் 14 சதவீத பஸ் கட்டண அதிகரிப்பு தேவைப்படுவதாக கணக்கிடப்படுகின்றது. எவ்வாறாயினும், கடந்த வருட பஸ் கட்டண திருத்தத்தில் 12 சதவீத கட்டண அதிகரிப்பு கணக்கிடப்பட்டிருந்த போதிலும் 6 சமவீத அதிகரிப்பே மேற்கொள்ளப்பட்டது.

எஞ்சிய 6 சதவீதத்துக்கு நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை உறுதியளித்த போதிலும் அந்த உறுதி செயற்படுத்தப்படவில்லை என அங்ஜன பிரியங்ஜித் சுட்டிக்காட்டினார்.

இதனால், இம்முறை கட்டண அதிகரிப்பு திருத்தத்தில் 20 சதவீத கட்டண அதிகரிப்பு கட்டாயம் இடம்பெற வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►