blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, May 1, 2014

கோபி உள்ளிட்ட மூவரை சுட்டுக்கொன்ற இராணுவ அதிகாரிகளுக்கு விருது

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்பட்ட கோபி, அப்பன் மற்றும் தேவிகன் ஆகிய மூவரையும் சுட்டுக்க்கொன்ற சம்பவத்தில் திறமையாகச் செயற்பட்ட  இராணுவ அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மூவரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி நெடுங்கேணி, வெடிவைத்தகல்லு காட்டுப் பகுதியில் இடம்பெற்றது.

இலங்கை இராணுவத் தலைமையகத்தில் நேற்று நடந்த நிகழ்வில், இராணுவத் தளபதி இந்த விருதுகளை வழங்கினார்.

வன்னிப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, சிறப்புப் படைப்பிரிவின் பிரிகேட் தளபதி பிரிகேடியர்
ஆர்.எம்.வை.ஜே.ரத்நாயக்க, இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் கேணல் ரி.எஸ்.சாலி, 2வது சிறப்புப்படைப் பிரிவின் கட்டளை அதிகாரி லெப்.கேணல் எம்.பி.கே.எல்.அமரசிங்க, லெப். டி.எம்.திசநாயக்க, கோப்ரல் தினேஸ்குமார, கோப்ரல் ஜெயசிங்க, கோப்ரல் கமகே ஆகிய எட்டுப் பேருக்குமே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்று இராணுவம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►