திருச்சி, வாழவந்தான்கோட்டை இலங்கை அகதிகள் முகாமில் இளைஞர் ஒருவரை
கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில், மூன்று இலங்கையர்களுக்கு ஆயுள்கால
சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு
வழங்கியுள்ளது.
வாழவந்தான்கோட்டை இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த சகாயசீலன் (வயது 38)
என்ற இளைஞன், கடந்த 2009 ஒக்டோபர் 5ஆம் திகதி கத்தியால் குத்திக்
கொல்லப்பட்டார்.பொலிஸார் நடத்திய விசாரணையில், கொட்டப்பட்டிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த ராஜகோபால் (வயது 52), இவரது மகன்கள் ரகுநேசன் (வயது 23) மற்றும் ஜெயரூபன் (வயது 24) ஆகிய மூவரும் அவரைக் கொன்றது தெரியவந்துள்ளது.
கொட்டப்பட்டு முகாமில் இருக்கும் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் முன்விரோதமே இந்த படுகொலைக்கு காரணமானது என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் பதிவு செய்த வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, சந்தேகநபர்களான ராஜகோபால், ரகுநேசன், ஜெயரூபன் ஆகிய மூவருக்கும் ஆயுள்கால சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply