blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, May 1, 2014

சென்னை குண்டு வெடிப்புக்களில் இலங்கையர்கள் காயமடையவில்லை

இந்தியாவின் சென்னை மத்திய ரயில் நிலையத்தில்  இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் இலங்கையர்கள் எவரும் காயமடையவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்துடன் அமைச்சு தொடர்பிலுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

'இந்தக்  குண்டு வெடிப்புக்கள் தொடர்பில் சென்னையிலுள்ள எங்களது தூதரகத்திடம் நாங்கள் கேட்டோம்.  இதற்கு அத்தூதரகம், இந்தக் குண்டு வெடிப்புக்களில் இலங்கையர் எவரும் காயமடையவில்லை. எவ்வாறாயினும், இது தொடர்பில் மேலும் தகவல்களை சேகரிப்பதற்காக தூதரக அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளது' என அமைச்சின் பொது உறவுகள் அதிகாரி சத்ய ரொட்றிகோ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►