இந்திய
மக்களவைத் தேர்தலில் முடிவுகள் மக்களின் வெற்றியை பிரதிபலிப்பதாக பாரதீய
ஜனதாக் கட்சியின் தலைவர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இந்திய மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி 339 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.
ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 63 தொகுதிகளில் மாத்திரே வெற்றி பெற்று பாரிய பின்னடவை எதிர்நோக்கியுள்ளது.
ஏனைய கட்சிகள் 147 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.
பாரதீய ஜனதாக் கட்சியின் இந்த வரலாறு காணாத வெற்றி, இந்தியாவில் புதிய யுகமொன்றை உருவாக்கியுள்ளதாக மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவை சிறந்த வழியில் முன்நகர்த்திச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், மக்களின் நலனுக்காக செயற்படவுள்ளதாகவும் மோடி தெரிவிக்கின்றார்.
தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர், நரேந்திர மோடி தனது தாயாரை நேரில் சென்று சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இம்முறை மக்களவைத் தேர்தலை போன்று, இதற்கு முன்னர் பார்த்ததில்லை என பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார்.
இதுவரை காலமும் வெற்றிபெற்றிராத தொகுதிகளில், இம்முறை பாஜக வெற்றி பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தமைக்கு சோனியா காந்தியும், ராகுல் காந்தியுமே பொறுப்புக்கூற வேண்டுமென காங்கிரஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் நலனுக்காகவும், சமூக ஒற்றுமைக்காகவும், மக்களுக்காகவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்தும் செயற்படுமென காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
மக்களின் தீர்ப்பிற்கு மதிப்பளிப்பதாகவும், அதனை ஏற்றுக்கொள்வதாகவும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சிக்கு இதுவொரு சிறந்த ஆரம்பம் என கட்சியின் தலைவர் அரவிந் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
டில்லி முடிவுகள் சற்று ஏமாற்றமளிப்பதாகவும், நாட்டின் தலைநகரில் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டுமெனவும் கெஜ்ரிவால் சுட்டிக்காட்டியுள்ளார்.
தம்மிடம் அதிகளவு பணம் மற்றும் அதிகாரங்கள் இல்லாத போதிலும், மக்களின் நலனை மாத்திரமே கருத்திற்கொண்டு செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் வெற்றிபெற்றுள்ள நரேந்திர மோடிக்கு, தென்னிந்திய நடிகர் ரஜனிகாந், ஷாருக் கான், அனுபம் கீர், பிரீத்தி ஷிந்தா மற்றும் பாடகி ஆஷா போஸ்லெ ஆகியோர் சமூக வலைத்தளங்கள் ஊடாக தமது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply