blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, May 16, 2014

மோடிக்கு ஜெயலலிதாவின் ஆதரவு தேவையில்லை – பிரசாத் காரியவசம்


மோடிக்கு ஜெயலலிதாவின் ஆதரவு தேவையில்லை – பிரசாத் காரியவசம்இந்திய மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றிபெற்றதன் மூலம் இலங்கை – இந்திய உறவுகள் மேலும் வலுப்படும் என இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்திய மக்கள் இந்த தீர்மானமிக்க வெற்றியையும், காங்கிரஸ் கட்சியின் தோல்வியையும் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையில் மிகவும் பலம்வாய்ந்த மத்திய அரசு உருவாகவுள்ளமை இலங்கைக்கு மகிழ்ச்சியளிப்பதாக பிரசாத் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.


பலமான மத்திய அரசு இருப்பது இலங்கையுடனான உறவுகளை பிரச்சினையின்றி தொடர்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமென எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

பாரதீய ஜனதாக் கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கு தேவையான ஆசனங்களை சுவீகரித்துள்ளதால், மத்திய அரசாங்கத்தை நிறுவுவதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் ஆதரவைப் பெற வேண்டிய தேவை பாரதீய ஜனதாக் கட்சிக்கு இல்லையென இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►