மூதூர் மணல்சேனை பகுதியில் ஒருவரை வாளால் வெட்டிய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மணற்சேனை பகுதியிலுள்ள வயலில் இரவுநேர காவலில் ஈடுபட்டிருந்த ஒருவர் மீது, நேற்றிரவு இருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர்கள் அவரை வாளால் வெட்டி தப்பிச்சென்றுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்தவர், மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மூதூர் மணற்சேனை பகுதியைச் சேர்ந்த இருவர், தம்மீது தாக்குதல் நடத்தியதாக தாக்குதலுக்கு உள்ளானவர் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதற்கமைய, தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்வதற்கான விரிவான விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply