திருகோணமலை,
உப்புவெளி பொலிஸ் பிரிவின் துவாரங்காடு பகுதியில் சிறுமியை
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளான்.15 வயதுச் சிறுவனால், 6 வயதுச் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேகநபரான சிறுவன் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலதிக வைத்திய சிகிச்சைகளுக்காக சிறுமி திருகோணமலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply