blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, May 16, 2014

முள்ளிவாய்க்காளில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர தடை


முள்ளிவாய்க்காளில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர தடைமுள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமது உறவுகளை வட மாகாண சபை கட்டடத் தொகுதிக்குள் நினைவுகூருவதற்கு வட மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் இன்று காலை மேற்கொண்ட முயற்சிக்கு பொலிஸார் இடையூறு விளைத்துள்ளனர்.

மாகாண சபை கட்டடத் தொகுதிக்குள் விளக்கேற்றுவதற்கான ஏற்பாடுகளுடன் இன்று கைதடியிலுள்ள மாகாண சபை கட்டட வளாகத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்த சசிதரன் ஆகியோர் சென்றிருந்தனர்.

எவ்வாறாயினும் அரச கட்டடமொன்றில் இத்தகைய நினைவு நிகழ்வொன்றை நடத்த முடியாது என தெரிவித்து பொலிஸார் குறித்த மாகாண சபை உறுப்பினர்கள் மாகாண கட்டடத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுத்துள்ளனர்.

வட மகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர்வதற்கான ஆயத்தங்களுடன் இன்று காலை கைதடியில் அமைந்துள்ள வட மாகாண சபை கட்டட வளாகத்திற்கு சென்றிருந்தனர்.

மாகாண சபைக் கட்டத்திற்குள் பிரவேசிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து மாகாண சபைக் கட்டத்திற்கு வெளியே விளக்கேற்றி உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த மாகாண சபை உறுப்பினர்கள் முயற்சித்தனர்.

எவ்வாறாயினும் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் மாகாண சபை கட்டத்திற்கு வெளியே ஏற்றப்பட்ட விளக்கினை அணைப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►