blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, May 2, 2014

வழமைக்குத் திரும்பியது வட மார்க்க ரயில் சேவை

குருநாகல், பொதுஹர ரயில் விபத்தின் பின்னர் வடக்கு மார்க்கத்தில் இன்று காலை முதல் அலுவலக ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்பிரகாரம் மஹவ, குருநாகல் மற்றும் பொல்கஹவெல ரயில் நிலையங்களில் இருந்து மூன்று அலுவலக ரயில்கள் பயணத்தை ஆரம்பித்ததாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் சுட்டிக்காட்டுகின்றது.

இந்த அலுவலக ரயில் சேவைகள் தற்காலிகமாக இரண்டாம் மார்க்கத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிடுகின்றது.

பளை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பகுதிகளில் இருந்து பயணத்தை ஆரம்பித்துள்ள இரவுநேர தபால் ரயில்களும் கொழும்பை அண்மித்துள்ளன.
பளை நோக்கி பயணிக்கும் யாழ்தேவி ரயில் இன்று அதிகாலை 5.45 க்கு கொழும்பிலிருந்து புறப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.

பொத்துஹர ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று முன்தினம் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 68 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து காரணமாக வடக்கு மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

தடைப்பட்டுள்ள வடக்கு ரயில் மார்க்கத்திலான போக்குவரத்தை இன்று மாலைக்குள் வழமைக்குக் கொண்டுவர முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►