கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு முதல் இன்றிரவு 8.30 வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய
கட்டட ஆய்வு நிலையத்தினால் நேற்றிரவு 8.30 அளவில் மீண்டும் மண்சரிவு அபாய
எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்
பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கின்றார்.
மண்சரிவு அபாயம் தொடர்பில் மக்கள் தொடர்ந்தும் அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை,
பலத்த மழையினால் வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்த 163 பேர் பாதுகாப்பான
இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்
பணிப்பாளர் தெரிவிக்கின்றார்.
அத்துடன் மாத்தளை மாவட்டத்தில் வீசிய கடும் காற்றினால் 2 வீடுகளுக்கு பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
சீரற்ற
வானிலையினால் பாதிப்புக்கள் ஏற்படும் பட்சத்தில் அது தொடர்பான
நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இடர் முகாமைத்துவ நிலையம்
தயாராகவுள்ளதாகவும் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி மேலும்
குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment
Leave A Reply