வலி.மேற்கு பிரதேச சபையினரால் உலக புவி தினம் நாளை மறுதினம் காலை 10 மணி முதல் 12 மணிவரை பிரதேச சபை கலாசார மண்டபத்தில் தவிசாளர் நாகரஞ்சினி தலைமையில் இடம்பெறவுள்ளது.இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை ரவி மற்றும் சிறப்பு விருந்தினராக சங்கானைப் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வீ.சிவகுமார் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.'இன்றைய நகராக்க செயல்முறைகள் நகர மீட்சித் திறனை வளர்த்தெடுக்கின்றன. வளர்த்தெடுக்க தவறிவிட்டன.' என்னும் தலைப்பில் பட்டிமன்றமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply