முசலிப் பிரதேசத்தில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்காக இராணுவத்தினரின் துணையுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று குற்றஞ்சாட்டியுள்ளார் ஆளும் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்.
கடந்த வெள்ளிக்கிழமை, நாடாளுமன்றில் மீள்குடியேற்ற அமைச்சின் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு சுட்டிக் காட்டியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:""வன்னி மாவட்டத்தில் வசித்து போர் காரணமாக வேறிடங்களுக்குச் சென்ற மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர்வதானது மந்த கதியிலேயே நடைபெறுகின்றது. அத்துடன் மீள்குடியமர்ந்தவர்களுக்கு போதியளவு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. குடிதண்ணீரைக் கூட பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையிலேயே அவர்கள் உள்ளனர்.
மேலும் முசலிப் பிரதேசத்தில் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றத்துக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பிரதேசத்தின் அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற வகையில் அங்கு மீள்குடியேறுபவர்கள் 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் குறித்த பிரதேசத்தில் வசித்திருக்க வேண்டும். அல்லது அவர்களின் பெற்றோரோ, பெற்றோர்களின் பெற்றோரோ வசித்திருக்க வேண்டும்.
இடம்பெயர்ந்து உள்நாட்டில் வசித்த பிரதேசத்தில் வசித்த பதிவை இரத்துச் செய்து பிரதேச செயளாலரிடம் அல்லது பொறுப்பு வாய்ந்த அதிகாரியிடம் அதற்கான ஆவணங்களைப் பெற்று சமர்பிக்கப்படும் பட்சத்தில் மாத்திரம் தான் மிள்குடியேறுகின்ற பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன் படியே கடந்த காலங்களில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டது. சிங்கள சகோதரர்களும் மீளக்குடியேறும் போது இதே நிபந்தனைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் இதனை மீள்குடியேற்ற அமைச்சு கண்காணிக்க வேண்டும். முசலிப் பிரதேச மக்கள், அண்மைக் காலமாக அங்குள்ள படையினரின் செயற்பாடுகள், அந்தப் பிரதேசத்தில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகளுக்குரியதாக இருப்பதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மன் னார் மாவட்ட அரச அதிப ருக்கு எழுத்து மூலமாக தெரிவித்துள்ளேன். அந்தப் பிரதேசத்தில் வாழுகின்ற முஸ்லிம், தமிழ் மக்கள் ஆளும், எதிர்கட்சி உறுப்பினர்கள், சிங்கள சகோதரர்கள் மீள்குடியேறுவதை ஆதரிக்கின்றனர். அபிவிருத்திக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே மீள் குடியேற்ற இடம்பெற வேண்டும். அதை விடுத்து வேறு மாவட்டங்களில் வசித்தவர்களை அங்கு வந்து மீள்குடியேற்ற ஒரு போதும் விடப்போவதில்லை'' என்று தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, May 14, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவற்காடு பகுதியில் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது சுமார் 1300 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்...
-
நாள்தோறும் செய்யும் யோகப் பயிற்சியின் மூலம், தனது மனதையும் உடலையும் வலுவாக வைத்துள்ளார் 93 வயது நானம்மாள் பாட்டி. நானம்மாளின் சொந்த ஊர் ...
-
இலங்கையிலுள்ள தமிழர்களின் அபிலாஷைகளுக்கு தீர்வு காணக்கூடிய அரசியல் தீர்வொன்றையே இந்தியா விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
-
திருகோணமலை நகர எல்லைக்குள் செயற்படும் தனியார் கல்வி நிலையங்கள் மாலை 6 மணிக்குப் பின்னர் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தக் கூடாதென நகர சபைக் ...

No comments:
Post a Comment
Leave A Reply