வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் உடுவில் உப அலுவலகம் தற்காலிகமாக பிரதேச சபையின் தலைமை அலுவலகத்திற்கு எதிர்வரும் 19 ஆம் திகதி தற்காலிகமாக மாற்றப்படுவதாக பிரதேச சபைத் தவிசாளர் தி.பிரகாஸ் தெரிவித்தார்.மருதனார்மடம் சந்தைத் தொகுதியின் கட்டிட நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால் சந்தைத் தொகுதிக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் இயங்கி வந்த உப அலுவலகமே இவ்வாறு மாற்றப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இருந்தும் உடுவில் உப அலுவலகத்துடன் இயங்கி வந்த ஆயுர்வேத வைத்தியசாலை மற்றும் பொது நூலகம் ஆகியன தொடர்ந்தும் முன்னர் இருந்த இடத்திலேயே இயங்கும் என்பதுடன் இவற்றிற்கு செல்வதற்கு இதன் மேற்குப் பக்கமாகவுள்ள 'சிங்கத்தின் கலட்டி' வீதியைப் பயன்படுத்தி உள்நுளைய முடியும் எனவும் தெரிவித்தார்.
சந்தையின் உட்புறத்தே வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள மரக்கறி மற்றும் பலசரக்கு வியாபார இடங்களும் சந்தையின் தெற்கு பகுதிக்கு தற்காலிகமாக இடம்மாற்றப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply