யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
வட
மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாரம்பரிய சிறுகைத் தொழில்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அகியோரின் இணைத் தலைமையில் இந்தக் கூட்டம்
நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் யாழ். மாவட்டத்தை
பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை
உறுப்பினர்கள், பிரதேச சபை பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
யாழ்.
மாவட்டத்தின் விவசாயம், மீன்பிடி, சுகாதாரம், கல்வி, நீர்விநியோகம்
உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டது .
அத்துடன் இரணைமடு நீர்
விநியோகத்திட்டம் மீன்பிடி மற்றும் வடமராட்சி கிழக்கு மண் அகழ்வு போன்ற
விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படுகின்ற சந்தர்ப்பத்தில் வாதப்
பிரதிவாதங்கள் ஏற்பட்டது.
இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையில் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இன்றைய
கூட்டம் பிற்பகல் நிறைவு பெற்ற நிலையில், நாளைய தினமும் யாழ். மாவட்ட
ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, May 26, 2014
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் வாத பிரதிவாதங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
பள்ளி வாழ்வில் இருந்து தொலைந்த நண்பர்கள், வாழ வழி தேடி கடல் கடந்து சென்ற நம் ஊர் உறவுகள் என அனைவரையும்
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
சீரற்ற வானிலை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ர...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
No comments:
Post a Comment
Leave A Reply