blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, May 26, 2014

சர்ச்சைக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்ட அபிவித்திக் குழு கூட்டம் நிறைவு


சர்ச்சைக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்ட அபிவித்திக் குழு கூட்டம் நிறைவுமட்டக்களப்பு  மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் அபிவிருத்தி நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

 முதன் முதலாக நடைபெற்ற இந்தக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் நடத்தப்படாமல் கொக்கட்டிச்சோலை கருணா அம்மான் கலாசார மண்டபத்தில் நடத்தப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பை வெளியிட்டனர்.

மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஜனாதிபதியின் ஆலோசகர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட மாகாணசபை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்ககள் அரச திணைக்கள அதிகாரிகள் படை அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தில் நிலவும் பிரச்சினைகளும் மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்ற நிதிமூலங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் சம்பந்தமான நடைமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் நியூஸ்பெஸ்டுக்குக் குறிப்பிட்டார்.
தற்போது நடைமுறையில் உள்ள விசேட திட்டங்கள் தொடர்பிலும் மாகாண சபையின் ஊடாக முன்னெடுகக்கப்படுகின்ற திட்டங்கள் தொடர்பிலும் அங்கு கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்ப்பு:
இதேவேளை கூட்டத்தில் ஆளும் மற்றும் எதிர்கட்சியினருக்கு இடையில் வாதப் பிரதிவாதங்களும் ஏற்பட்டன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் அபிவிருத்திக் குழுக்கூட்டத்தை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடத்தமைக்காக தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

ஆர்ப்பாட்டம்:
இதவேளை யானையினால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றும் கொக்கட்டிச்சோலையில் நடைபெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண உறுப்பினர் இரா.துரைரத்தினம் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டப் பேரணியில் வவுணதீவு மற்றும் பட்டிப்பளைப் பிரதேசங்களைச் சேர்ந்த பெரும் எண்ணிகையிலானோர் கலந்து கொண்டனர்.

பேரணியாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நடைபெற்ற மண்டபத்திற்கு முன்னால் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பிரதியமைச்சர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரிடம் மகஜர் ஒன்றையும் இதன்போது கையளித்தனர்.

யனைகள் மக்களின் வீடுகளை அழிக்கின்றமை பயில்களை அழிக்கின்றமை தொடர்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாக நியூஸ் பெஸ்டுக்குத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் சாள்ஸ் இந்த விடயம் தொடர்பில் நிரந்தரமான தீர்வையொன்று ஏற்படுத்துவதாக அங்கு முடிவெடுக்கப்பட்டதாகவும் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►