
மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பிலான கடிதத்தை துரையப்பா நவரெட்ணராஜா கடந்த 21ஆம் திகதி தம்மிடம் கையளித்ததாக கிழக்கு மாகாண சபையின் செயலாளர் எம்.சி.எம்.சரீப் குறிப்பிட்டார்.
கடந்த மாகாண சபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த துரையப்பா நவரெட்ண ராஜாவுக்கு போனஸ் ஆசனம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த மாகாண சபையில் இவர் மீன்பிடி, விவசாய மற்றும் கைத்தொழில் அமைச்சராக பதவிவகித்திருந்தார்.
இந்த நிலையில் இவரது இராஜpனாமா அறிவித்தலை தேர்தல்கள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக கிழக்கு மாகாண சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இவரது வெற்றிடத்திற்கு புதிதாக நியமிக்கப்படுபவர் தொடர்பான தீர்மானத்தை தேர்தல்கள் ஆணையாளர் மேற்கொள்வார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரையப்பா நவரட்ணராஜா தமது இராஜினமாவிற்கான காரணத்தை பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிடவில்லை என கிழக்கு மாகாண சபையின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply