blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, May 21, 2014

கொழும்பு பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிலிருந்து ஆசிரியர் சடலமாக மீட்பு

கொழும்பு பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிலிருந்து ஆசிரியர் சடலமாக மீட்புகொழும்பு பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவரே தூக்கில் தொங்கிய நிலையில் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

சடலமாக மீட்கப்பட்டவரின் மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

சடலம் மீதான நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சடலமாக மீட்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டுள்ளாரா அல்லது இது ஒரு கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாகவும் நாளைய தினம் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும் என குறித்த பாடசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►