
தபால் ரயில் கொழும்பிலிருந்து நேற்றிரவு 8 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்க தயாராக இருந்தது.
எனினும் பதுளைக்கான இரவு நேர தபால் ரயில் சற்று தாமதமாகி பயணத்தை ஆரம்பித்ததாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.
இதன் காரணமாக ராகம மற்றும் கம்பஹா ரயில் நிலையத்தில் குறித்த ரயில் சாரதி மீது தாக்குதல் மேற்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றுள்ளன.
பின்னர், ரயில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் உதவியுடன் ரயில் போக்குவரத்தை மீள ஆரம்பித்ததாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.
இதேவேளை, சீதுவ பகுதியில் கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த ரயிலில் நேற்றிரவு கோளாறு ஏற்பட்டதன் காரணமாக ரயில் தாமதமாகியமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply