நைஜீரியாவில் இடம்பெற்ற தொடர்குண்டுத் தாக்குதலில் 118 பேர் உயிரிழந்துள்ளனர்.நைஜீரியாவின் மத்திய பகுதியான ஜோஸ் நகரில் இடம்பெற்றுள்ள இந்த தாக்குதல்களில் 56 பேர் காயமமைடந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சன நெரிசல் மிக்க சந்தை தொகுதியில் முதல் குண்டு வெடித்ததுள்ளதுடன் 30 நிமிட இடைவேளையில் வைத்தியசாலையொன்றுக்கு அருகில் மற்றுமொறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பல உயிர்களை காவு கொண்ட இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் நைஜீரியாவில் மேற்கொள்ளப்பட்ட சில தாக்குதல்கள் பொக்கோ ஹராம் ஆயுததாரிகளால் நடத்தப்பட்டவை என அந்நாட்டு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தொடர்தாக்குதல்களினால் குறித்த பகுதிகளில் பதற்றம் நிலவி வரும் நிலையில் சில இடங்களில் இந்த தாக்குதல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
தாக்குதல்களுக்கு கண்டனம் வெளியிட்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply