நீர்கொழும்பு
கட்டான இரட்டை சந்திப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலின் போது
பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.மோதலை தடுக்க முற்பட்டபோது சம்பந்தப்பட்ட தரப்பினர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முனைந்ததாகவும், இதன்போது பொலிஸார் பாதுகாப்புக்காக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இனந்தெரியாத ஒரு குழு மற்றொரு தரப்பினரை கூரிய ஆயுதங்களால் தாக்குவதாக கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்றிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
சம்பவத்தில் வெட்டுக்காயங்களுக்குள்ளான மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply