வடக்கு ரயில் மார்க்கத்துக்கான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.பொல்காவெலவுக்கும் பொத்துஹரவுக்கும் இடைப்பட்ட பகுதியில் ரயிலொன்று இன்று அதிகாலை தொழில்நுட்ப கோளாறுக்கு உட்பட்டமையே போக்குவரத்து தாமதம் ஏற்பட காரணம் என்று ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்தது.
இதனால் வடக்கு ரயில் மார்க்கத்துக்கான ரயில் போக்குவரத்து கொழும்பிலிருந்து பொல்கவலெ வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறுக்குள்ளான ரயிலை திருத்தி இயக்கத்தை வழமைக்கு கொண்டுவரும் வரை அந்தப் பகுதியூடான ரயில் சேவைகளில் தாமதம் நிலவுலாம் என்று ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டது.
No comments:
Post a Comment
Leave A Reply