தனமல்வில உடவலவ பிரதான வீதியில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.சிறியரக லொறியுடன் ஜீப் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் லொறியின் முன்பாக அமர்ந்து சென்ற இருவரும் சாரதியும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அந்த சந்தர்ப்பத்தில் சாரதியை தவிர ஏனைய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
குடாஓய பகுதியைச் சேர்ந்த இருவரே பலியாகியுள்ளனர்.
காயமடைந்த லொறியின் சாரதி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
விபத்து தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட ஜீப் வண்டியின் சாரதியை வெல்லவாய நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment
Leave A Reply