கொலம்பியாவின் வடக்கு பகுதியில் பஸ் ஒன்று தீப்பற்றி விபத்துக்குள்ளானதில் 30 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.தேவாலய நிகழ்ச்சிக்காக குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ்ஸில் குறித்த சம்பவம் ஏற்பட்டதாக அந்நாட்டின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீவிபத்தில் 30 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 18 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர்களின் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து கொலம்பியா அதிபர் ஜூவான் மானுவல் சாண்டோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகுந்த கவலை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply