உயிர் பிரியும் தருணத்திலும் உண்மை காதலை வெளிப்படுத்திய காதல் ஜோடியின் புகைப்படமொன்று வெளியாகியுள்ளது.லெம்படுசா தீவிற்கு அருகில், கடந்த செப்டெம்பர் மாதம் சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்களை ஏற்றிய கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானது.
இந்த கப்பல் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 366 புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அந்த கப்பலில் காதல் ஜோடி ஒன்றும் பயணித்து உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த இளம் ஜோடி உயிர் பிரியும் தருணத்தில் தங்களை ஒருவருக்கு ஒருவர் கட்டி அணைத்தவாறு உயிரிழந்துள்ளமை புகைப்படத்தின் ஊடாக காணக்கூடியதாக உள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரால் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply