அநுராதபுரத்தில்
துப்பாக்கியை காண்பித்து, இளைஞரொருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் கைதான
மூன்று சந்தேகநபர்களும் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் இன்று அநுராதபுரம் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து, வேறு சந்தேகநபர்கள் இருப்பின் அவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
கடந்த 14 ஆம் திகதி 23 வயதான இளைஞரொருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டிருந்தார்.
அதன்பின்னர், தலாவ பகுதியிலுள்ள வீடொன்றில் அடைத்துவைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், அந்த இளைஞர் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply