மரண தண்டனையை மீளவும் அமுல்படுத்த வேண்டுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெற்று வரும் பாரியளவிலான குற்றச் செயல்களை கட்டுப்படுத்த உச்சபட்ச தண்டனை அறிமுகம் செய்யப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் அண்மையில் ஜனாதிபதி ஊடகப் பிரதானிகளை சந்தித்த போது மரண தண்டனை அமுல்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மரண தண்டனையை அமுல்படுத்துவது அவசியமானது என்ற போதிலும் அப்பாவிகள் தண்டிக்கப்பட கூடாது என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply