யாழ். நெடுந்தீவில் இரண்டு சிறார்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபரை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (13) மாலை ஆஜர்படுத்தியபோது, அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள சிறுவர்களின் பெற்றோரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, நேற்றுக் காலை சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
08 வயது சிறுவனும், 04 வயது சிறுமியுமே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேகநபரால் குறித்த சிறுவனும், சிறுமியும் நீண்டகாலமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிறுவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply