உள்நாட்டு விவசாயிகளிடமிருந்து பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்வதற்காக முறையான திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.திஸ்ஸமகாராம மஹசென்புர பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பெரிய வெங்காய செய்கையை பார்வையிட்டபோது ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடம் முழுவதும் சந்தைக்கு பெரிய வெங்காயத்தை விநியோகிக்கும் வகையில் மொனராகலை, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெரிய வெங்காய செய்கையை மேற்கொள்வதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் 2015 ஆம் ஆண்டளவில் 2,000 ஹெக்டயர் காணியில் பெரிய வெங்காய செய்கையை மேற்கொண்டு 50,000 மெற்றிக்தொன் வெங்காயத்தை சந்தைக்கு விநியோகிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மூன்று மாதங்களுக்கு மக்களின் பெரிய வெங்காய தேவையை ஈடு செய்ய முடியும் எனவும் விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply