பிலியந்தலை மாவித்தர தொலேகனத்த பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் தீ பரவியுள்ளது.தொழிற்சாலையில் பரவிய தீயை கட்டுப்படுத்துவதற்காக ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் தெஹிவளை- கல்கிசை மாநகர சபைகளின் தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக தீயணைப்பு சேவைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் தீயினால் குறித்த தொழிற்சாலை முற்றாக சேதமடைந்துள்ளது.
அத்தோடு தொழிற்சாலைக்கு அருகிலிருந்த வீடொன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
No comments:
Post a Comment
Leave A Reply