வவுனியா கனகராயன்குளம் நாகதம்பிரான் கோயிலை அண்மித்த பகுதியில் புதையல் அகழ்வதற்கு முயற்சித்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அரசாங்கத்திற்கு சொந்தமான காணியொன்றிலேயே இவர்கள் புதையல் அகழ்வதற்கு முயற்சித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் புத்தளம், யாழ்ப்பாணம், மாங்குளம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவர்களிடமிருந்து கெப் வாகனம் ஒன்றும் புதையல் அகழ்வதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply