இலங்கையிலிருந்து
மாதாந்தம் 200,000 இளநீர் சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக
லுணுவில தெங்கு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.கடந்த காலங்களில் பெரும்பாலும் உள்நாட்டு சந்தைகளுக்கே இளநீர் விநியோகிக்கப்பட்டதாக நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி ஜயந்த குணதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
வருடாந்தம் சுமார் 6,500 இளநீர் மாத்திரமே ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் தற்போது சர்வதேச சந்தையில் இளநீருக்கான கேள்வி அதிகரித்துள்ளது.
இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கே அதிகளவில் இளநீர் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளிலும் இலங்கையின் இளநீருக்கு கேள்வி அதிகரித்துள்ளதாக தெங்கு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இளநீர் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் விமானம் மூலம் அதனை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply