blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, May 16, 2014

அல்-கொய்தாவுடன் தொடர்புடைய இலங்கையர் மலேசியாவில் கைது

அல்-கொய்தா தீவிரவாத அமைப்புடன் பாரிய தொடர்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் இலங்கையர் ஒருவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் சேர்த்து, மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இம்மூவரும் இந்தியாவில் வைத்தே கைது செய்யப்பட்டார்கள் என்றும் த ஸ்டார் ஒன்லைன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், இந்தியதாவிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் மீது தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தனர் என முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கைதாகியுள்ள இலங்கையர், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் தங்கியுள்ளார் என்றும் இவர் இதற்கு முன்னர் இருமுறை கைது செய்யப்பட்டவர் என்றும், தீவிரவாத அமைப்பில் ஆட்களைச் சேர்க்கும் பணியிலேயே இவர் ஈடுபட்டுள்ளார் என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்ததாக மேற்படி ஊடக செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►