blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, May 16, 2014

அழகுக் கலை நிபுணர் ஜெனட் பாலசூரிய காலமானார்


அழகுக் கலை நிபுணர் ஜெனட் பாலசூரிய காலமானார்பிரபல அழகுக்கலை நிபுணர் ஜெனட் பாலசூரிய இன்று அதிகாலை காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைபெற்றுவந்த நிலையிலேயே தனது 79ஆவது வயதில் அவர் காலமானார்.

ஐந்து பிள்ளைகளின் தாயாரான ஜெனட் பலசூரிய இலங்கையின் அழகுக்கலைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய ஒருவராவார்.

உள்நாட்டு மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு அழகுசாதன் பொருட்களை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்துவதிலும் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

அழகுக்கலை நிபுணர் ஜெனட் பாலசூரிய தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பல்வேறு விருதுகளையும் வென்றிருந்தார்.

வெள்ளவத்தை சின்சஃபா வீதியிலுள்ள வீ்ட்டில் அன்னாரின் பூதவுடல் இன்று பிற்பகல் முதல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►