பெண்
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு புதிய உத்தியோகபூர்வ சீருடைகளை
அறிமுகப்படுத்துவதற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு அனுமதியளித்துள்ளது.பொலிஸ் மாஅதிபரின் பரிந்துரைக்கு அமைய, சாதாரண சீருடையின் காக்கி நிறத்தில் புதிய சீருடைகள் வழங்கப்படவுள்ளன.
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கும், சார்ஜன் தரத்தினாலான உத்தியோகத்தர்களுக்கும் நீலக் காற்சட்டையும், சேர்ட்டும் வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தரத்திலுள்ள உத்தியோகத்தர்களுக்கு நீலக் காற்சட்டை, சேர்ட் மற்றும் பூட்ஸ் கோட்டும் வழங்கப்படவுள்ளன.
பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இதுவரை காலமும் பாவாடை மற்றும் சேர்ட் ஆகியவற்றினை சீருடையாக பயன்படுத்தியதுடன், அலுவலக வேலை மற்றும் ஏனைய விடயங்களை கருத்திற்கொண்டு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணியான பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு புதிய சீருடையை அறிமுகப்படுத்துவதற்கு பொலிஸ் மாஅதிபர் முன்வைத்த யோசனைக்கும், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு அனுமதியளித்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply