களுத்துறை
தொடம்கொட பகுதியில் கடமைக்கு சென்றுகொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்
தாக்குதலுக்கு இலக்கான சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.தொடம்கொட பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் நேற்றிரவு 8 மணியளவில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியுள்ளனர்.
தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவை காவலரணில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தரே தாக்குதலில் காயமடைந்து களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர் தமது காரில் கடமைக்கு சென்றுகொண்டிருந்தபோது கெப் வாகனத்தில் வந்த சிலர் அவரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பில் இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அரசியல்வாதி ஒருவருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் இடையே தெற்கு அதிவெக வீதியின் கொட்டாவை நுழைவாயில் அருகே வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.
குறித்த சம்பவத்திற்கும் நேற்றைய தாக்குதலுக்கும் இடையே தொடர்பு உள்ளதா என பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் நாம் வினவியபோது, அது தொடர்பிலும் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டார்
No comments:
Post a Comment
Leave A Reply