எல்பிட்டிய நகரிலுள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.நியாகம, தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த 21 வயதான யுவதி ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.
இந்த யுவதி கொழும்பு நோக்கி வருவதற்காக இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
யுவதியுடன் தொடர்பு வைத்திருந்த ஒருவரிடம் இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யுவதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply