எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, May 24, 2014
தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளவர்களின் வீடுகளில் பணமோசடி
தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளவர்களின் வீடுகளில் பணமோசடியில் ஈடுபடுகின்ற நடவடிக்கை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிடுகின்றது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பிரதிநிதிகள் என்ற போர்வையில் போலி அடையாள அட்டையுடன் சிலர் பண மோசடியில் ஈடுபட்டிருப்பதாக பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொது முகாமையாளருமான மங்கல ரன்தெனிய தெரிவிக்கின்றார்.
வீடுவீடாக சென்று பணம் திரட்டும் நடவடிக்கைகள் எதனையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முன்னெடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
காப்புறுதி இழப்பீடு வழங்கப்படுவதாக தெரிவித்து, அதன்பொருட்டு குறிப்பிட்ட தொகை பணத்தை மோசடி பேர்வழிகள் சிலர் அறவிடுவதாக தகவல்கள் கிடைத்திருப்பதாக பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இத்தகைய பண மோசடியில் ஈடுபடுகின்ற எவரேனும் வெளிநாட்டு தொழில் புரிவோரின் வீடுகளுக்கு சமூகமளித்தால், அவர்கள் குறித்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு பணியகத்திற்கு அறிவிக்குமாறு மங்கல ரன்தெனிய கேட்டுக்கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இவர் பெயர் டேம்மிட்சல் வடநாட்டை சார்ந்தவர். இவர் ஒருநாள் சாலை ஓரம் நடந்து சென்றபோது சாலையோரம் ஒரு மலைபாம்பு அடிபட்டு கிடந்ததை கண்டார்.
-
தானே,குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, நண்பனின் மனைவியை கற்பழித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மயக்க மருந்து ...
-
ஜனாதிபதி மாளிகையிலிருந்த மெக்கோ கிளிகளை காணவில்லை கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் வளர்க்கப்பட்டு வந்த மெக்கோ ரக க...
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
No comments:
Post a Comment
Leave A Reply