
இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் ஒரு மணியளவில் விண் கல் பொழிவை காணக்கூடியதாக இருக்கும் என கொழும்பு பல்கலைக்கழக பௌதீக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிடுகின்றார்.
ஆயினும், இந்த விண்கல் பொழிவை இன்று பிற்பகல் இலங்கை மக்கள் அரிதாகவே காணமுடியும் என்பதுடன், அமெரிக்க மற்றும் கனேடிய மக்களால் தெளிவாக அவதானிக்க முடியும் என்றும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.
சூரியனை சுற்றிவருகின்ற சீ_209 என்ற வால் நட்சத்திரத்தின் ஓடு பாதையிலேயே இந்த விண்கற்கள் உருவாகியிருப்பதாக கொழும்பு பல்கலைக்கழக பௌதீக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் தெரிவித்தார்.
சுமார் 400 முதல் ஆயிரம் வரையான விண்கற்கல் இன்றைய தினம் பொழியும் என எதிர்ப்பார்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், இலங்கையில் இன்று சூரிய அஸ்தமனத்தின் பின்னர் முன் இரவில் சுமார் 20 – 30 வரையான விண்கற்களை அவதானிக்க முடியும் என பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.
இந்த புதிய விண்கல் பொழிவை வெற்றுக் கண்களால் பார்வையிட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment
Leave A Reply