திருகோணமலையில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு
திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லங்கா பாலம் எனுமிடத்தில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
வீட்டில் துணி துவைக்கும் இயந்திரத்தில் துணிகளை துவைக்கும்போதே பெண் மீது மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply