
அதற்கமைய டெங்கு நுளம்புகள் பரவும் பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு இரசாயன புகை விசுறும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக மாநகர சபையின் சுகாதாரத் திணைக்களத்தின் பிரதான சுகாதார வைத்தியர் ரூவன் விஜயமுனி தெரிவித்தார்.
வீட்டுத் தோட்டங்களுக்கு அருகிலும் வீட்டினூள்ளும் இரசாயனப் புகையை விசுறுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு நகரில் இடைக்கிடை நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நகரின் பல இடங்களில் டெங்கு நுளம்பு பெருக்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக டொக்டர் ரூவன் விஜயமுனி கூறியுள்ளார்.
வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் கொழும்பு நகரில் மாத்திரம் 1350 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது.
இதேவேளை, குறித்த காலப் பகுதியில் கொழும்பு நகரில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஐவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply