blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, May 9, 2014

யாழ்.குடா அபிவிருத்தி;புதிய இலங்கைத்தூதுக்குழுவிற்கு உதயப்பெரேரா எடுத்துரைப்பு

யுத்தத்திற்குப் பின்னர் யாழ். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி குறித்து கட்டளைத்தளபதி உதயப்பெரேரா வெளிநாடுகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத்தூதுவர் குழுவுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
வெளிநாடுகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத்தூதுவர் குழு ஒன்று யுத்தத்திற்குப்பின்னர் யாழ். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி தொடர்பில் அறிந்து கொள்ளும் நோக்குடன் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

அதனடிப்படையில் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதயப்பெரேராவுடனும் நேற்று முன்தினம் பலாலி படைத்தலைமையகத்தில் சந்திப்பினை மேற்கொண்டனர்.

அதன்போது யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதியாக தான் பொறுப்பேற்றதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு நிலமை, மீள்குடியேற்றம், புனரமைப்பு, புனர்வாழ்வு, அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பிலும் தூதுவர் குழுவிற்கு தெளிவுபடுத்தினார்.

மேலும் பாதுகாப்பு படையினர் மூலம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சமூக திட்டங்களும் தொடர்பாகவும் குழுவிற்கு தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►