இலங்கை – இந்திய மீனவர் பேச்சுவார்த்தையை எதிர்வரும் 12 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்திய
அதிகாரிகள் மற்றும் , இந்திய மீனவர் சங்கங்களின் கோரிக்கைக்கு அமைய இந்த
தீர்மானம் எடுக்கப்பட்டதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித
சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பு செடக்ஸ் நிலையத்தில் எதிர்வரும் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மீனவர் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
மீனவர்
பேச்சுவார்த்தைக்காக தமிழக மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் 18 பேரும்,
10 அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர்
குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ள இந்திய
பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் எதிர்வரும் 11 ஆம் திகதி இரவு
நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.
இதேவேளை இலங்கையை
பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மீனவர் சங்கங்களின் 20 பிரதிநிதிகளும்,
திணைக்களம் சார்ந்த 10 அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில்
பங்கேற்கவுள்ளனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார்,
திருகோணமலை மற்றும் தென் பகுதியின் சில மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளும்
பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.
இலங்கை – இந்திய மீனவர்களின்
பிரச்சினைகள் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை கொழும்பில்
நடத்துவதற்கு இரண்டு தடவைகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும்
இந்திய அரசினால் இணக்கப்பாடு தெரிவிக்கப்படாமை காரணமாக பேச்சுவார்த்தை
பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்திய மக்களவை தேர்தல்
நிறைவுபெற்று புதிய அமைச்சரவையுடன் மீனவர் பேச்சுவார்த்தை
இடம்பெறவுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ,
இரு தடவைகள் பிற்போடப்பட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள
பேச்சுவார்த்தையினூடாக இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள்
எட்டப்படுக் கூடும் எனவும் அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, May 4, 2014
இந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை அடுத்த வாரம்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
என்னுடன் போட்டியிட மைத்திரிபால சிறிசேனவுக்கு முடியுமா? அவர் எனக்கு எவ்வகையிலும் ஒரு சவாலாக இருக்கவே முடியாது.
-
கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தின் அனைத்து கல்விசார் நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டிருப்பதாக கிழக்கு பல்...
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
கல்முனை -13, 183, நகர மண்டப வீதி, முஹம்மது ஹனிபா முஹம்மது றினோஸ் அகில இலங்கை சமாதான நீதவானாக கல்முனை மாவட்ட நீதிபதி எம். பி. முஹைடீன் ம...
No comments:
Post a Comment
Leave A Reply