வவுனியா மற்றும் பசறை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.வவுனியா முதலாம் குருக்குத்தெரு பகுதியில் பயணிகள் பஸ்சில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சடலம் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பசறையில் உழவு இயந்திரத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment
Leave A Reply