blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, May 17, 2014

வர்த்தகரிடம் கப்பம் பெற முற்பட்ட இருவர் கைது


வர்த்தகரிடம் கப்பம் பெற முற்பட்ட இருவர் கைதுமஹரகமயில் வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்று இரண்டு இலட்சம் ரூபா கப்பம் பெறுவதற்கு முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹரகம பமுணுவ வீதியிலுள்ள ஆடைக் களஞ்சியசாலையொன்றின் உரிமையாளரை  முச்சக்கரவண்டியில் வந்த சிலர் கடத்தியிருந்ததாக பொலிஸார் கூறினர்.

பின்னர் வர்த்தகரை விடுவிப்பதற்காக இரண்டு இலட்சம் ரூபா கப்பத்தை செலுத்துமாறு குறித்த வர்த்தகரின் நண்பனுக்கு சந்தேகநபர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கிடைத்த தகவலுக்கு அமைய தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார் கடத்தலுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை கைது செய்ததுடன், முச்சக்கரவண்டியையும் கைப்பற்றினர்.
சந்தேகநபர்கள் மொறட்டுவை பகுதியைச் சேர்ந்வர்களாவர்.

அவர்கள் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►