blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, May 15, 2014

சர்வதேச சட்டத்திற்கு அமைய இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை

சர்வதேச சட்டத்திற்கு அமைய இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கைசர்வதேச சட்டத்திற்கு அமைய, இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண எதிர்பார்த்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவிக்கின்றது.
இதற்காக இரண்டு நாடுகளினதும் அரசாங்கங்களும் விரைவில் கலந்துரையாடவுள்ளதாக கடற்றொழில் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன குறிப்பிட்டார்.

மீனவர் பிரச்சினை தொடர்பில் இருநாடுகளினதும் அரச தரப்பு மற்றும் பிரதிநிதிகள் மட்ட பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இலங்கைக்குரிய கடற்பரப்பில் ரோலர் இழுவைப் படகுகளை பயன்படுத்தி, மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இந்திய மீனவர்கள் விடுத்த கோரிக்கை, இலங்கை மீனவ பிரதிநிதிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

மாநில மட்டத்தில் காணப்படும் அதிகாரங்களைப் பயன்படுத்தி, இரண்டு நாடுகளினதும் நட்புறவு பாதிக்காத வகையில், இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண எதிர்பார்ப்பதாக சரத் குமார குணரத்ன சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை நடத்துவது தொடர்பில் இந்திய மக்களவைத் தேர்தலின் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இரண்டாம் கட்ட மீனவர் பேச்சுவார்த்தை இணக்கப்பாடுகள் எட்டப்படாத நிலையில் நிறைவுபெற்றது.
இருநாட்டு மீனவர்களும் தமது தொழிலை உரியமுறையில் மேற்கொள்வதற்கு அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் ஏனும் தீர்க்கமான முடிவுகள் எட்டப்படக் கூடுமென இராமேஸ்வரம் ஒன்றிணைந்த மீனவ சங்கத்தின் தலைவர் என். தேவதாசன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►