blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, May 14, 2014

கழிவறையில் 6 அடி நீள மலைப்பாம்பு; அதிர்ச்சியில் மன நலம் பாதித்த பெண்


கழிவறையில் 6 அடி நீள மலைப்பாம்பு; அதிர்ச்சியில் மன நலம் பாதித்த பெண்சிங்கப்பூரைச் சேர்ந்தவர் நோரோஸ் லிண்டா அசட் (வயது 34). இவர் நேற்று (13) தனது வீட்டில் உள்ள கழிவறையைப் பயன்படுத்தியபோது  தனது வலது பக்க  தொடையில் ஏதோ ஊர்வதைப் போன்று உணர்ந்துள்ளார்.

பின்னர் குனிந்து பார்க்கையில் அது ஒரு ஆறடி நீள பாம்பு என்பதை அறிந்தவுடன் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்.

பதறியடித்துக்கொண்டு வெளியே வந்த அசட் உடனடியாக தன்னுடைய கணவரிடம் இதைக் கூறியுள்ளார்.

கணவர் உடனடியாக மீட்புப்படையினர்களுக்குத் தகவல் கொடுத்துவிட்டு, உடனடியாக மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட சிகிச்சையில் அவர் சிறிது நேரத்தில் குணமானார். ஆனால், மனதளவில் மிகவும் பாதிக்கபட்டுள்ளதாகத் தெரிகிறது. கழிவறை என்றாலே அவர் தற்போது அலறியடித்து ஓடுகிறார்.

இந்த நிலையில் மீட்புப்படையினரால் அந்தப் பாம்பைப்  பிடிக்க முடியவில்லை. இவருடைய வீட்டின் கழிவறையில்  பாம்பு வருவது இது முதல்முறையல்ல. சில மாதங்களுக்கு முன் இதேபோல் ஆறடி நீள பாம்பு ஒன்றை இவருடைய தாயார் இதே கழிவறையில் பார்த்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►